• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- நாட்டில் நிலவும் சாதகமற்ற பொருளாதார நிலைமை காரணமாக வௌிநாட்டு கையிருப்பு மற்றும் நிதிச் சந்தை என்பவற்றின் மீது அதிகரிக்கும் தாக்கத்தினை தளர்த்துவதற்கு தெரிவுசெய்யப்பட்ட சில பொருட்களின் இறக்குமதியினை தற்காலிகமாக இடைநிறுத்தும் பொருட்டிலான ஒழுங்குவிதிகள் 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளை தளர்த்துவதன் மூலம் கொடுப்பனவு நிலுவையின் மீது ஆகக்குறைந்த தாக்கத்தினை செலுத்தும் தெரிவுசெய்யப்பட்ட பொருள் வகைகளின் இறக்குமதிக்கான வரையறைகளை நீக்கும் தேவை இலங்கை மத்திய வங்கியினாலும் ஏனைய உரிய தரப்பினர்களினாலும் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தற்காலிக இறக்குமதி இடைநிறுத்தல் அட்டவணையின் HS குறியீடு 1,216 பட்டியலிலிருந்து HS குறியீடு 286 ஐ நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் 2023‑06‑09 ஆம் திகதியிடப்பட்டதும் 2335/26 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.