• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் கூட்டமைப்பில் இலங்கையின் தலைமைத்துவம் (IORA) 2023 - 2025
- இந்து சமுத்திரத்தை எல்லையாக கொண்ட 23 உறுப்பு நாடுகள் அடங்கிய இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் கூட்டமைப்பின் தலைமைத்துவம் 2023 ஒக்றோபர் மாதத்தில் தற்போது தலைமை வகிக்கும் பங்களாதேஷ் நாட்டினால் அதனை இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ளது. இந்த அமைப்பின் தலைமைத்துவத்தை கொண்டிருக்கும் காலப்பகுதியில் பிராந்தியத்தினதும் அங்கத்துவ நாடுகளினதும் அபிவிருத்திக்கு பிராந்திய ரீதியிலான பங்களிப்பினை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். குறித்த பணிகளை வெற்றிக் கொள்வதற்கு சனாதிபதி செயலகத்தின் சிரேட்ட உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் உரிய அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய செயலணியினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் தாபிப்பதற்கும் 02 வருட காலப்பகுதிக்கு செயலகமொன்றை தாபிப்பதற்குமாக பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.