• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து (தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்) ஒழுங்குவிதி 2023-04-27 ஆம் திகதியிடப்பட்டதும் 2329/43 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் பொருட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.