• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமய சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல்
- சமய சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் மத போதனைகளை அவமதித்தலை தடுத்தல் என்பன பொருட்டு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தும் தேவை எழுந்துள்ளது. அதற்கிணங்க புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இது தொடர்பிலான விடயங்களை ஆராய்நது சிபாரிசுகளுடனான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க கிறிஸ்தவ ஆகிய பிரதான மதங்களின் மதத் தலைவர்கள், சட்டத்துறை நியுணர்கள், ஊடக, சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.