• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு (திருத்த) சட்டமூலம்
- 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டத்திற்கு சில திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அதன் பொருட்டு திருத்த சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2023‑01‑30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு (திருத்த) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.