• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடனிறுக்க வகையின்மை பற்றிய சட்ட மறுசீரமைப்பு
- நுகர்வோர் கடனிறுக்க வகையின்மை மற்றும் கூட்டிணைக்கப்படாத சிறு தொழில்முயற்சிகளின் கடனிறுக்க வகையின்மை சம்பந்தமான ஏற்பாடுகள் 1853 ஆம் ஆண்டின் கடனிறுக்க வகையின்மை பற்றிய கட்டளைச் சட்டத்திலும் கம்பனிகளின் கடனிறுக்க வகையின்மை சார்ந்த ஏற்பாடுகள் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களின் கீழ் உள்ள ஏற்பாடுகள் சமகால தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமையினால் புதிய ஒருங்கிணைந்த கடனிறுக்க வகையின்மை தொடர்பிலான சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் தேவை தெரியவந்துள்ளது. அதற்கிணங்க, உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி 03 மாத காலத்திற்குள் ஆரம்ப வரைவினை தயாரித்து சமர்ப்பிப்பதற்கு சட்ட ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.