• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sutech Sugar Industries (Pvt.) Ltd. (Greenfield Sugar Development Project) சார்பில் நீண்டகால குத்தகை அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் காணியை ஒதுகீடு செய்தல்
- தாய்லாந்தின் Sutech Engineering கம்பனியினால் 400 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் வவுனியாவில் கரும்பு செய்கை சார்பிலும் சீனி உற்பத்தி செய்வது சார்பிலும் கருத்திட்ட பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்தின் மூலம் நாட்டின் மொத்த சீனி தேவையின் 20 சதவீதத்தை (சீனி மெற்றிக்தொன் 120,000)உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்திற்குரிய தொழிற்சாலை மனையிடம் மற்றும் அது சார்ந்த வசதிகளின் பொருட்டு வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான வனாந்தரம் சுற்றியுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 200 ஹெக்டாயர் காணி இனங்காணப்பட்டுள்ளது. இந்த காணியினை உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்குவதற்கு வனப் பாதுகாப்பு திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.