• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலகளாவிய காலநிலையுடன் தொடர்புடைய செயற்பாடுகளை துரிதப்படுத்தும் பொருட்டு ஒரே மாதிரியான காலநிலை அனர்த்த நிலைக்கு உள்ளாகும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் 'காலநிலை நியாயமன்றத்தை' உருவாக்குதல்
- உலகளாவிய காலநிலை கலந்துரையாடலில் காலநிலை ஆபத்திற்கு முகங்கொடுக்கும் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சம்பந்தமாக தாக்கத்தை செலுத்தும் சில முக்கிய துறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுவருகின்றதோடு, நட்டம் மற்றும் சேதம் தொடர்பிலான நிதியமொன்றை தாபிப்பது சம்பந்தமாக கடந்த காலநிலை மாறுபாடு பற்றிய கலந்துரையாடல்களின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டாலும் பல்வேறுபட்ட காரணங்களினால் குறித்த நிதியினை தாபிப்பதற்கு இதுவரை தாமதமாகியுள்ளது. ஆதலால், நட்டம் மற்றும் சேதம் சார்பில் நிதி பெற்றுக் கொள்வதனை துரிதப்படுத்துதல், மாற்று மற்றும் மரபுவழி வழிமுறைகளிலிருந்து விலகி அனுகுவதனை நோக்காக கொண்டு 'காலநிலை நியாயமன்றத்தை' உருவாக்குவது பொருத்தமானதென இலங்கை முன்மொழிந்துள்ளது. அதேபோன்று காலநிலை ரீதியில் ஆபத்துக்களுக்கு உள்ளாகும் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு சேதங்களை குறைப்பதற்கும் முகங்கொடுப்பதற்கும் தலையிடுவதற்கும் வழங்கக்கூடிய தீர்வு பொதியின் அத்தியாவசிய கூறாக குறித்த நாடுகள் முகங்கொடுத்துள்ள கடன் நெருக்கடிகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, “கடன் நியாய மன்றம்" என்பதனையும் உள்ளடக்குவது பொருத்தமானதென்பது இலங்கையின் கருத்தாகும். அதற்கிணங்க குறித்த முயற்சியினை வெற்றிக்காண்பதற்கு 'காலநிலை நியாயமன்றத்தை' தாபிக்கும் நோக்கில் முன்மொழிபவராக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட திறமுறை ரீதியிலான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.