• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் வெளிக்கள பரிசோதனையின் ஒருங்கிணைந்த வெளிக்கள பயிற்சி 2025 சார்பில் இலங்கை அனுசரணை வழங்குதல்
– இலங்கை 1996‑10‑24 ஆம் திகதியன்று விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதோடு, இந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கு 2023‑06‑12 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் நாடொன்று அணுசக்தி பரிசோதனை / வெடிப்பொன்றை மேற்கொண்டுள்ளதா என்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு வௌிக்கள பரிசோதனையினை மேற்கொள்வதற்கு விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்த அமைப்பினால் இந்த ஒப்பந்தத்தின் IV ஆம் பிரிவின் மூலம் பொறிமுறையொன்றைத் தாபித்துள்ளது. இதன் பொருட்டிலான செயற்பாடுகள் மற்றும் பணிகளை நிறைவேற்றுவதற்கும் பரிசோதனை உபகரணங்கள் தொடர்பிலான பயிற்சியினை வழங்கும் ஒருங்கிணைந்த வெளிக்கள பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் இலங்கைக்கான தேசிய தொழிநுட்ப மையநிலையமாக புவியியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்தினால் ஒருங்கிணைந்த வெளிக்கள பயிற்சி 2025 நிகழ்ச்சித்திட்டம் சார்பில் அனுசரணை வழங்குவதற்கு கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தகைமை மதிப்பீட்டிற்கு அமைவாக மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்கு அண்மைய பிரதேசத்தில் குறித்த ஒருங்கிணைந்த பயிற்சியினை நடாத்துவது ஏற்றதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க வௌிக்கள பரிசோதனையின் ஒன்றிணைந்த வௌிக்கள பரிசோதனை 2025 சார்பிலான அனுசரணையினை இலங்கை பொறுப்பேற்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.