• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
- சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கும் ஜோர்ஜியா தேசிய சுற்றுலா நிர்வாக நிறுவனத்தின் அரசாங்க சட்டம் பற்றிய சட்ட நிறுவனத்துக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.