• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சொகுசு ஹோட்டல் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் Capital Investment LLC நிறுவனத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணி கையளித்தல்
- ஐக்கிய அரபு இராச்சியத்தின் Capital Investment LLC நிறுவனம் முழுமையான நேரடி வௌிநாட்டு முதலீடொன்றாக 25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி ஹோட்டல் தொகுதியொன்றை நிர்மாணித்து நடாத்திச் செல்லும் கருத்திட்ட மொன்று சார்பில் தற்போது இலங்கை மின்சார சபையிடமுள்ள மவுசாகலே நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள காணித் துண்டையும் குறித்த நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவையும் நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கருத்திட்ட பிரேரிப்பொன்றை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க உரிய நிறுவனங்களின் உடன்பாட்டினைப் பெற்றுக் கொண்டு உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த இந்த கம்பனிக்கு மேற்போந்த காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் கையளிப்பதற்கு முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.