• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 ஆம் ஆண்டிற்கான இறுதி வரவுசெலவுத்திட்ட நிலமை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 13 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் இறுதி வரவுசெலவுத்திட்ட நிலமை அறிக்கையானது உரிய நிதியாண்டு முடிவடைந்து 05 மாதங்கள் கடப்பதற்கு முன்னர், பொதுமக்களுக்கு வௌியிடுவதற்கும் அதன் பின்னர், குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும் அதற்கிணங்க, 2022 ஆம் ஆண்டின் இறுதி வரவுசெலவுத்திட்ட நிலமை அறிக்கை நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.