• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கு அமைவாக பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், சனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல் சட்டம், உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டம் ஆகியவற்றைத் திருத்துதல்
- 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் செயல்வலுவுக்கு வந்ததும் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், சனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல் சட்டம், உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டம் என்பவற்றுக்கு இடைநேர் விளைவான திருத்தங்களை மேற்கொள்ளும் தேவை இனங்காணப்பட்டதோடு, இந்த திருத்தங்களை மேற்கொள்வதற்கு 2023‑01‑23 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.