• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தைத் திருத்துதல்
- 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தைத் திருத்துவதற்கு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக 2018‑03‑06 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் (திருத்த) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.