• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச்சட்டத்தை இரத்துச் செய்தல்
– பாண் விற்பனையை ஒழுங்குறுத்துவதற்கும் விற்பனைக்காக வைக்கப்படும் பாணுக்கு காலாவதியான மா கலக்கப்படுவதனை தடுப்பதற்கும் இயலுமான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச்சட்டமானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது இந்த கட்டளைச் சட்டத்திலுள்ள சில ஏற்பாடுகளுடன் முரண்பாடு எழுகின்ற சந்தர்ப்பங்கள் உள்ளமையினால் இந்தக் கட்டளைச்சட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தும் தேவை இல்லையென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் கட்டளைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு சட்டமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.