• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
– தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் / சுயாதீன குழுக்கள் மற்றும் அபேட்சகர்களினால் ஒழுக்க நெறியினை மீறும் சந்தர்ப்பங்களில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்கினை பயன்படுத்தமுடியாதென விசேடமாக இனங்காணப்பட்ட வாக்களர்களுக்கு விசேட வாக்கெடுப்பு நிலையங்களை தாபிப்பதற்காகவும் 19681 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தும் பொருட்டு 2022‑12-12 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தலொன்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஊடக வழிகாட்டல்களை மீறும் சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டம், சனாதிபதி தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் சட்டம் என்பவற்றை திருத்தும் பொருட்டும் 2022‑12-12 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் திருத்த சட்டமூலம் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட திருத்தங்ளை உள்ளடக்கி உரிய தேர்தல் சட்டங்களை வெவ்வேறாக திருத்துவதற்குப் பதிலாக தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என்னும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. அதற்கிணங்க, உரிய திருத்தங்களை உள்ளடக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.