• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்
- பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தற்போது நிலவும் தடைகள் மற்றும் வாய்ப்புகளை இனங்கண்டு, குறித்த தடைகளை நீக்கி கிடைக்கக்கூடியதாகவுள்ள வாய்ப்புகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரின் தலைமையில் மேலும் 06 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு 2022‑08‑30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, இந்த அமைச்சரவை உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 25 சிபாரிசுகளைக் கொண்ட அறிக்கையானது சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டதுடன், இந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.