• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகளை குறைத்தல்
– 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துபொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள தேசிய மருந்துபொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை மருந்துகளின் விலைகளை குறித்தல் மற்றும் அது சம்பந்தமான சகல விடயங்களுக்குமான ஒழுங்குறுத்தாளராக செயற்படும் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு ஒருங்கிணைவாக ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மருந்துகளின் உச்ச சில்லறை விலையை பல சந்தர்ப்பங்களில் 97 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் தற்போதைய பொருளாதார நிலைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் பெறுபேறாக ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமானளவு குறைவடைந்துள்ளது. அதற்கிணங்க, 60 மருந்து வகைகளின் உச்ச சில்லறை விலையை 2023‑06‑15 ஆம் ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக 16 சதவீதத்தால் குறைத்தல் பொருட்டும் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மருந்து வகைகளின் விலைகளை மீளாய்வு செய்யும் பொருட்டும் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.