• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines சேவையின் Honeywell மேலதிக மின் விநியோக அலகுகளை பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- SriLankan Airlines சேவையின் Honeywell மேலதிக மின் விநியோக அலகுகளை பழுதுபார்ப்பதற்கு வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி கேள்வி வழிமுறையின் மூலம் விலை கோரப்பட்டுள்ளது. இதன் சார்பில் மூன்று (03) விலை முன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு SriLankan Airlines சேவையின் Honeywell மேலதிக மின் விநியோக அலகுகளை பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தத்தை இரண்டு வருட காலத்திற்கு 15.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மதிப்பிடப்பட்ட விலைக்கு ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த Honeywell International SARL நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.