• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் பற்றிய சட்டமூலம்
- 'நீதிமன்றத்தை அவமதித்தல்' தவறு பற்றிய தௌிவான மற்றும் குறிப்பான ஏற்பாடுகள் மற்றும் சந்தர்ப்ப ரீதியான நிலைமைகள், பிரதிவாதியின் எதிர்வாதம் மற்றும் தண்டனை விதித்தல் உட்பட தளர்த்தலின் போது பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைமுறையை உள்ளடக்கிய 'நீதிமன்றத்தை அவமதித்தல்' பற்றிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2022‑06‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.