• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெறுமதிசேர்க்கப்பட்ட வரி விலக்களிப்பினை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி முறையை இரத்துச் செய்தல்
– சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிகள் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சம்பந்தமாக இரண்டு (02) பிரதான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இதன் கீழ் பெரும்பாலான விலக்களிப்புகளை நீக்கி பெறுமதிசேர்க்கப்பட்ட வரி முறையினை மறுசீரமைப்பதற்கும் இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி முறையினை இரத்துச் செய்வதற்கும் நேரிட்டுள்ளது. நடைமுறையிலுள்ள பெறுமதிசேர்க்கப்பட்ட வரி விலக்களிப்பினை மீண்டும் ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் அண்ணளவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 1.2 சதவீதத்தால் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது. இதற்கிணங்க, கல்வி, சுகாதாரம் மற்றும் கமத்தொழில் போன்ற துறைகளுக்கான விலக்களிப்புகளும் அதேபோன்று குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் மீதான தாக்கத்தினை தளர்த்தும், பொருளாதாரத்தின் பிரதான துறைகளை பாதுகாக்கும் விலக்களிப்புகளை மேலும் பேணி பெறுமதிசேர்க்கப்பட்ட வரி விலக்களிப்புகள் பெரும்பாலானவற்றை நீக்குவதற்கும் பெறுமதிசேர்க்கப்பட்ட வரியினை மீளச் செலுத்துவதற்கு மிக முறைப்படுத்தப்பட்ட வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தி நடைமுறையிலுள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி முறையினை 2024‑01‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக இரத்துச் செய்வதற்கும் இயலுமாகும் வகையில் பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டத்திலுள்ள உரிய ஏற்பாடுகளை திருத்தும் பொருட்டும் அதன் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.