• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவைக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட கட்டளை
– இலங்கையில் சர்வதேச தரங்களுக்கு அமைவாக தேசிய அளவை தரங்களை பேணுதல், பல்வேறுபட்ட துறைகளுக்கான அளவை சேவைகளை வழங்குதல், அளவையை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குறுத்துகை உட்பட சேவை செயற்பாடுகளின் மூலம் நியாயத்தை உறுதிப்படுத்துதல் போன்றவை அளவைக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பிரதான பணிகளாகும். இதற்கிணங்க, 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவைக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் 3(ஆ) ஆம் உப பிரிவின் கீழ் தேசிய அளவை ஆராய்ச்சி நிலையம் தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் 2022‑06‑16 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரும் விதத்தில் அளவை விஞ்ஞான பரிசோதனை உத்தியோகத்தர் பதவிகளை பிரகடனப்படுத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் 2022‑08‑26 ஆம் திகதியிப்பட்டதும் 2294/54 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கட்டளையொன்றை வௌியிடப்பட்டுள்ளது. இந்த கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.