• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பனி செயலாளர்கள் தொடர்பிலான ஒழுங்குவிதிகளை 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இற்றைப்படுத்துதல்
- கம்பனிகள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் யாவும் இணையவழி ஊடாக வழங்கப்படு கின்றமையினால், இந்த பணிகளை முறையாக நடாத்திச் செல்வதற்கு 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பனி செயலாளர்கள் தொடர்பிலான ஒழுங்குவிதிகளை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உரிய தரப்பினர்களினதும் மதியுரை குழுவினதும் கருத்துக்கள் மற்றும் பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கம்பனி செயலாளர்கள் தொடர்பிலான திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் 2023‑03‑17 ஆம் திகதியிடப்பட்டதும் 2323/41 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.