• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விரிவாக்கப்பட்ட அணுசக்தி பரிசோதனை தடைசெய்யும் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளித்தல்
– 1996‑09‑10 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் விரிவாக்கப்பட்ட அணுசக்தி பரிசோதனை தடைசெய்யும் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் உலகின் எப்பாகத்திலும் "அணுசக்தி ஆயுதங்கள் எவற்றையும் பரீட்சித்தல் அல்லது பிற அணுசக்திகளை வெடிக்கவைத்தல்" என்பவற்றை தடை செய்வதற்கு உறுப்பு நாடுகள் உடன்பட்டுள்ளன. தற்போது 186 நாடுகள் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதோடு, 177 நாடுகள் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கமளித்துள்ளன. இலங்கை விரிவான அணுசக்தி பரிசோதனை தடை செய்யும் உடன்படிக்கையில் 1996‑10‑24 ஆம் திகதியன்று கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையானது. விரிவாக்கப்பட்ட அணுசக்தி பரிசோதனை தடைசெய்யும் உடன்படிக்கை அமைப்புடன் பயிற்சி, ஆற்றல் அபிவிருத்தி, தரவு மற்றும் தகவல்களை பகிர்ந்துக் கொள்ளல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றது. இந்த உடன்படிக்கைக்கு இலங்கை செயல்வலுவாக்கம் அளிப்பதன் மூலம் அணுசக்தி ஆயுதங்கள் அல்லாத உலகின் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான செயற்பாட்டு முன்மொழிவாளராக இலங்கையின் இராஜதந்திர செயற்பாடு அங்கீகாரத்திற்கு உட்படுவதும் சுனாமி அனர்த்த எச்சரிக்கை, காலநிலை மாற்றங்கள் மற்றும் நில கற்கைகள் போன்ற இலங்கை உட்பட பெரும்பாலான அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு நலன்களை வழங்கும் சிவில் மற்றும் விஞ்ஞான நோக்கங்களுக்கு பயனுள்ள தரவுகளை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கிணங்க, இலங்கை விரிவாக்கப்பட்ட அணுசக்தி பரிசோதனை தடைசெய்யும் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கும் இந்த உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளை அமுல்படுத்துவ தற்குமான சட்டங்களை வரைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.