• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தொற்றாநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பிலான தேசிய கொள்கை மற்றும் மூலோபாய கட்டமைப்பு
- இலங்கையில் தொற்றாநோய் காரணமாக நிகழும் மரணங்களில் கூடுதலான நூற்றுவீதத்திற்கு பிரதான காரணம் இருதய நோய், பக்கவாதம், புற்றுநோய், நீண்டகால சுவாச நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களாகும் என்பதோடு, ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய் நிலைமைகள் காரணமாக சுமார் 120,000 மரணங்கள் நிகழ்கின்றன. புகையிலை பாவனை, கேடுதலான மதுபான பாவனை, அதிக உடல் எடை, அதி இரத்த அழுத்தம், குருதியில் சீனியின் அளவு அதிகரித்தல், குருதியில் கொலஸ்றோல் அதிகரித்தல் போன்ற காரணங்கள் குறித்த நோய்களுக்கு பிரதானமாக தாக்கத்தை செலுத்தும் காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளன. ஆதலால், குறித்த நோய்களை முன்னதாகவே இனங்காண்பதற்கு பரிசோதனைச் சேவைகளை வழங்குவதற்கும் உரிய காலப்பகுதியில் சிகிச்சைகளை வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் சுகாதார துறையினை பலப்படுத்தவேண்டியுள்ளது. தொற்றாநோய் தடுப்புக்கான முதலாவது தேசிய கொள்கை 2009 ஆம் ஆண்டில் வௌிப்படுத்தப்பட்டதோடு, இந்த கொள்கையிளை மதிப்பிட்டு மீளாய்வுக்கு உட்படுத்தி உரிய சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் திருத்தியமைக்கப்பட்ட புதிய கொள்கையானது வரையப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையில் தொற்றாநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பிலான திருத்தியமைக்கப்பட்ட தேசிய கொள்கை மற்றும் மூலோபாய கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் குறித்த தேசிய கொள்கை மற்றும் மூலோபாய கட்டமைப்பை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.