• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கைத்தொழிலின் மேம்பாட்டிற்காக சுயாதீன ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றைத் தாபித்தல்
– உள்நாட்டு திரைப்படத்துறையின் மேம்பாட்டிற்காக 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க அரசாங்க திரைப்பட கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் அரசாங்க திரைப்பட கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டதோடு, 1980 ஆம் ஆண்டில் இது தேசிய திரைப்பட கூட்டுத்தாபனமாக பெயரிடப்பட்டது. தற்போது திரைப்பட கைத்தொழில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து கடும் பின்னடைவிற்கு உள்ளாகியுள்ளதோடு, கைத்தொழிலை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒழுங்குறுத்துகை பணிகளை மேற்கொள்ளும் சுயாதீன நிறுவனமொன்றைத் தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று தொலைக்காட்சி கைத்தொழிலின் முன்னேற்றத்திற்குத் தேவையான வழிகாட்டல்களின் பொருட்டும் இந்த கைத்தொழிலை ஒழுங்குறுத்தும் பொருட்டும் சுயாதீன நிறுவனமொன்று இருக்கும் பொருத்தப்பாடு தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கைத்தொழிலின் மேம்பாட்டிற்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கும் வழிகாட்டல்களை செய்வதற்கும் இயலுமாகும் வகையில் சுயாதீன ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றைத் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.