• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகைமை நியமங்கள், உயர் கல்வி தகைமைகள் மற்றும் தகுதிச் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பான சர்வதேச மாநாட்டினை நடாத்துதல்
- உயர் கல்வியின்பால் நிலவும் வாய்ப்புகள் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளமை அதிகரித்துள்ளதுடன் ஒவ்வொரு நாடும் தகைமை நியமங்களுக்கமைய வழங்கும் தகைமைகள் மற்றும் தகுதி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான வசதிகளை செய்து கொள்ளும் உடன்படிக்கைகள் மற்றும் சமவாயங்களை செய்து கொள்ளவேண்டியுள்ளது. இதற்கிணங்க, ருகுனு பல்கலைக்கழகமும் இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகமும் கல்வி அமைச்சுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் அதன் "Erasmus+“ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிதி அளிக்கப்படும் "ஆசிய நாடுகளுக்கிடையில் அங்கீகரித்தல் துறையின் வலய ஒத்துழைப்பு" (RecoAsia) ஊடாக பல செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. அதேபோன்று சர்வதேச தொழில் அமைப்பின் வழிகாட்டலின் கீழ் சார்க் தகைமை நியமங்கள் கருத்திட்டத்துடனும் இலங்கை இணைந்துக்கொண்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் RecoAsia மற்றும் சர்வதேச தொழில் அமைப்பின் நிதி உதவியுடன் 2023 யூன் மாதம் 28 ஆம் 29 ஆம் திகதிகளில் தகைமை நியமங்கள், உயர் கல்வி தகைமைகள் மற்றும் தகுதிச் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பான சர்வதேச மாநாட்டினை நடாத்துவதற்கு கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த மாநாட்டினை நடாத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.