• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்​கையில் கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கை சபையுடனும் மலேசியாவின் கமத்தொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துடனும் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
– இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையில் கமத்தொழில் துறையின் விஞ்ஞான ரீதியிலான ஒத்துழைப்பினை முறையாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இலங்​கையில் கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கை சபைக்கும் மலேசியாவின் கமத்தொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனதிற்கும் இடையில் ஐந்து (05) வருட காலத்திற்காக 2016 ஆம் ஆண்டில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளதோடு, இந்த உடன்படிக்கையை மேலும் ஐந்து (05) வருடங்களால் நீடிப்பதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலத்தை மேலும் ஐந்து (05) வருடங்களால் நீடிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.