• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டு கலவரங்களின் விளைவாக கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக நினைவு தூபியொன்றைத் தாபித்தல்
– சுதந்திரத்தின் பின்னரான இலங்கை உள்நாட்டு கலவரங்கள், அரசியல் அமைதியின்மை, இன மோதல்கள் மற்றும் அனைத்து இனங்கள், மதங்கள், தொழில்கள் அத்துடன் ஏனைய அடையாளங்களின் அடிப்படையில் அமைந்து அனைத்து பிரசைகளும் பாகுபாடின்றி ஆபத்துக்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருந்த காலப்பகுதியுடன்கூடிய நீண்டகால ஆயுத மோதல்களென்ற வடிவிலான வரலாறொன்றை அனுபவித்துள்ளனர். இனம், மதம், அரசியல் கருத்து அல்லது பிற வேறு எந்த காரணங்களின் அடிப்படையிலுமான எத்தன்மையிலுமான மோதல்களும் பிரசைகளின் நல்வாழ்வுக்கு பெரும் தீங்கு விளைவிப்பவை என்பதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டவையாகவும் காணப்பட்டதென்பது கடந்த காலத்தின் கசபான அனுபவங்கள் நிறுபித்துள்ளன. ஆயினும், இத்தகைய சம்பவங்கள் காலத்திற்கு காலம் மீண்டும் நிகழும் போக்கை கொண்டுள்ளதுடன், கூட்டாக பிரசைகளின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் சமூக மற்றும் பொருளாதார முறைமைகளையும் சீர்குலைக்கின்றன. 2018 ஆம் 34 ஆம் இலக்க இழப்பீட்டுக்கான அலுவலக சட்டத்தின் மூலம் நினைவுகூரும் வகையிலும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற வடிவத்தில் கூட்டாக இழப்பீட்டினை ஏற்பாடு செய்வது பாதிக்கப்பட்டவர்களின் சமூகத்திற்கு அல்லது குழுக்களுக்குள்ள உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டு கலவரங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர், பொலிஸ் உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாக அனைவரையும் நினைவு கூரும் முகமாக தூபியொன்றை நல்லிணக்கம் மற்றும் மீள் கட்டமைப்பின் அடையாளமாக கொழும்பு நகரத்தில் பொருத்தமான இடமொன்றில் நிர்மாணிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.