• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines சேவை சார்பில் தோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தத்தையும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சரக்குக் களஞ்சியங்களை கையாளும் சேவை களுக்கான ஒப்பந்தத்தையும் வழங்குதல்
- தோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளையும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சரக்குக் களஞ்சியங்களை கையாளும் சேவைகளையும் வழங்குவதற்காக கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை Qatar Aviation Services W.L.L. நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சரக்குக் களஞ்சியங்களை கையாளும் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை Dnata கம்பனிக்கும் வழங்குவதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.