• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காபன் வைப்பிலிடுகை தொடர்பாக இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- பாரீஸ் உடன்படிக்கையின் 6 ஆம் பிரிவின் மூலம் சர்வதேச காபன் வர்த்தகத்தின் கீழ் பசுமை இல்ல வாயு வௌியேற்றத்தைக் குறைப்பதை நோக்காகக் கொண்டு இலாபகரமான விதத்தில் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பாரீஸ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டமைப்பிற்குள் காபன் வைப்பிலிடுகை தொடர்பாக இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.