• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் சவுதி அரேபியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைகள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் சவுதி அரேபியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைகள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் ஏனைய சர்வதேச அமைப்புகளின் சார்பான செயற்பாடுகள் மற்றும் வலய, உலகளாவிய நடவடிக்கைகள், அரசியல் போக்கு மற்றும் பரஸ்பரம் முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாரி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.