• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் 'கொம்பனித் தெரு' கிராம உத்தியோகத்தர் பிரிவை மும்மொழிகளிலும் அவ்வாறே அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
- கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவின் "කොම්පඤ්ඤ වීදිය" கிராம உத்தியோகத்தர் பிரிவானது சிங்கள மொழியில் "කොම්පඤ්ඤ වීදිය" எனவும் தமிழ் மொழியில் 'ஸ்லேவ்ஐலன்ட்' எனவும் ஆங்கில மொழியில் 'Slave Island' எனவும் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெயரை மும்மொழிகளிலும் 'கொம்பஞ்ச வீதிய' என அழைப்பது மிகவும் பொருத்தமானதென பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இதற்குரியதான 1992‑12‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 743/5 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் 'கொம்பஞ்ச வீதிய' என அவ்வாறே மும்மொழிகளிலும் வௌிப்படுத்துவதற்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.