• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆயுள்வேத சட்டத்தை திருத்துதல்
– நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடைவதற்கு இயலுமாகும் வகையிலும் சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்திலும் 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்தை திருத்துவதற்கு 2022‑10‑31 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.