• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் திறமுறை ரீதியில் முக்கியத்துவமான வர்த்தக தொழில் முயற்சிகள் சார்பில் விலக்களிப்புகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்குதல்
- 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுக நகரம் விசேட பொருளாதார வலையமொன்றாக தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையை நவீனமயப்படுத்துதலுக்கு உட்படுத்துதல், பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் சேவை ஏற்றுமதியின் முன்னோடியாக நாட்டை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக சர்வதேச ரீதியில் போட்டிகரமான அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்கேற்ற சூழலை உருவாக்குவதற்காக கொழும்பு துறைமுக நகரத்தை மேம்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சனாதிபதி அவர்களையோ அல்லது கொழும்பு துறைமுக நகர என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடனோ உசாவுதலைச் செய்து ஆணைக்குழுவினால் திறமுறை ரீதியில் முக்கியத்து வமான வர்த்தக தொழில் முயற்சிகளுக்காக பெயர் குறிப்பிடப்படும் தொழில்முயற்சிகளை இனங்கண்டு விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்பு வழங்குதற்கு சிபாரிசு செய்யலாம். உரிய விலக்களிப்பு மற்றும் ஊக்குவிப்பு வழங்கும் பொருட்டு திறமுறை ரீதியில் முக்கியத்துவமான ஆரம்ப தொழில்முயற்சிகள் மற்றும் திறமுறை ரீதியில் முக்கியத்துவமான இரண்டாம் நிலை தொழில்முயற்சிகள் என இரண்டு பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளன. அதற்கிணங்க, குறித்த விலக்களிப்புகளை, ஊக்குவிப்புகளை வழங்கும் பொருட்டு முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.