• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின்போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை வாடகைக்கு எடுத்தல்
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின் போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை சர்வதேச போட்டி கேள்வி வழிமுறையினை பின்பற்றி வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு 2022‑11‑21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2023‑06‑01 ஆம் திகதி தொடக்கம் இரண்டு (02) வருட காலத்திற்கு வாடகை அடிப்படையில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின் போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை ஈடுபத்துவதற்கான ஒப்பந்தத்தை M/s Sri Lanka Shipping Company Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.