• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 சிறுபோக நெற்செய்கைக்காக யூரியா பசளை இறக்குமதி செய்தல்
- 2023 சிறுபோக நெற்செய்கைக்காக இரண்டு அரசாங்க பசளை கம்பனிகளிடமும் தனியார்துறையிடமும் உள்ள யூரியா பசளையின் அளவு மற்றும் கமநல சேவை நிலையங்களிலுள்ள கையிருப்பு என்பவற்றை கவனத்திற் கொள்ளும் போது சுமார் 25,000 மெற்றிக்தொன் யூரியா பசளையினை மேலும் இறக்குமதி செய்யவேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிணங்க இலங்கை பசளை கம்பனியின் மூலம் 60 சதவீதமும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் பசளை கம்பனியின் மூலம் 40 சதவீதமும் குறித்த பசளையினை இறக்குமதி செய்வதற்கு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.