• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தன்னோ புதுன்கே ஶ்ரீ தர்மஸ்கந்தா' பாடலை தேசிய மரபுரிமையொன்றாக மாற்றுதல்
– 1903 ஆம் ஆண்டில் ஜோன் த சில்வா அவர்களினால் எழுதப்பட்ட விஸ்வநாத் லொவ்ஜி அவர்களினால் இசையமைக்கப்பட்ட ஶ்ரீ சங்கபோ நாடகத்தில் உள்வாங்கப்பட்ட தற்போது சுமார் 120 வருடங்கள் பழைமையான 'தன்னோ புதுன்கே ஶ்ரீ தர்மஸ்கந்தா' பாடலை தேசிய மரபுரிமையொன்றாக பெயரிடுவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் வரை விழாக்கள் மற்றும் ஏனைய சந்தரப்பங்களில் இந்தப் பாடலானது தேசிய கீதத்திற்கு சமமாக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான சாட்சிகள் நிலவுகின்றன. மக்களின் சிந்தனை மற்றும் பொழுதுபோக்கு என்பவற்றின்பால் நூற்றாண்டுக்கு மேலாக இந்தப் பாடல் தொடர்ச்சியாக தாக்கம் செலுத்தியுள்ளதை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 'தன்னோ புதுன்கே ஶ்ரீ தர்மஸ்கந்தா' பாடலை தேசிய மரபுரிமையொன்றாக பிரகடனப்படுத்துவதற்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.