• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை தாபித்தல்
– தற்போது சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தாதியர் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்பு சம்பந்தமாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவை நியமிப்பதற்கு 2023‑03‑01 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை தாபிப்பதற்கு கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்குவதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்குமாக பதில் கல்வி அமைச்சராக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினாலும் சுகாதார அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.