• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines சேவை சார்பில் உலகம் முழுவதும் 16 விமான நிலையங்களில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குதல்
- SriLankan Airlines சேவை சார்பில் 17 விமான நிலையங்களில் எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வரையறுக்கப்பட்ட சர்வதேச ரீதியில் போட்டிகரமான விலை முன்வைப்பு கோரப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு 12 கம்பனிகளிடமிருந்து 52 விலை முன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 49 விலை முன்வைப்புகள் அடிப்படைத் தகைமைகளை பூர்த்தி செய்துள்ளன. சீனாவின் சங்ஹாய் பியுடொங் விமான நிலையம் சார்பில் விலை முன்வைப்பினை செய்திருந்த ஒரே விலை முன்வைப்பாளரின் விலை முன்வைப்பானது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 16 விமான நிலையங்களில் எரிபொருள் வழங்குவதற்காக ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரர்களுக்கு உரிய ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.