• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines Ltd. கம்பனியின் CFM Leap‑1A ரக விமான இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- SriLankan Airlines Ltd. கம்பனியின் CFM Leap‑1A ரக 03 விமான இயந்திரங்களின் பராமரிப்பு சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தகைமைபெற்ற வழங்குநர்களிடமிருந்து வரையறுக்கப்பட்ட சர்வதேச ரீதியில் போட்டிகரமான விலை முன்வைப்பு கோரப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு 03 பிரேரிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு CFM Leap‑1A ரக 03 விமான இயந்திரங்களின் பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தத்தை Lufhansa Technik AG நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.