• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழுள்ள அனைத்து துறைமுகங்களிலும் போதியளவு இழுவைக் கலங்கள் தொகுதியொன்றினை பேணிச் செல்லல்
– போட்டிகரமான விலை முன்வைப்பு செயற்பாட்டினைப் பின்பற்றி ஐந்து (05) வருட காலத்திற்கு 70 தொன் எடைக்கு மேற்பட்ட ஆற்றல் கொண்ட 04 இழுவைக் கலங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு 2022‑06‑13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இழுவைக் கலங்களை பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச ரீதியில் போட்டிகரமான விலை முன்வைப்பு கோரப்பட்டுள்ளதோடு, 02 விலை முன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 05 வருட காலப்பகுதிக்கு 04 இழுவைக் கலங்களை வாடகைக்கு எடுக்கும் பெறுகையை ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரரான M/s Sri Lanka Shipping Company Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.