• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவுஸ்திரேலியா, சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- அவுஸ்திரேலியா, சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது இந்த விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளை வழங்கும் உரிமப்பத்திரம் பெற்றுள்ள தரைக் கையாள்கை வழங்குநர்கள் அனைவரிடத்திலுமிருந்து வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி முறையின் கீழ் கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு விலை முன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தினை Menzies Aviation (Australia) Pty Ltd நிறுவனத்திற்கு மூன்று வருட காலத்திற்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.