• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய கலந்துரையாடலின் தற்போதைய நிலை
- உத்தேச இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய நான்காவது சுற்று கலந்துரையாடல் 2023‑03‑27 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்தப்பட்டதோடு, இந்த கலந்துரையாடலின் முன்னேற்றம் மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் கலந்துரையாடல்கள் முற்றாக்கப்பட்டு இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கு உரிய உடன்படிக்கையினை ஏற்பாடு செய்வதற்கும் அடுத்த சுற்று கலந்துரையாடலை 2023‑06‑27 ஆம் 2023‑06‑28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துவதற்கும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளமை பற்றி அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.