• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹிந்த ராஜபக்ச தேசிய டெலி சினிமா பூங்காவை அரசாங்க – தனியார் பங்குடமை திட்டத்தின் கீழ் முகாமித்தல்
- மஹிந்த ராஜபக்ச தேசிய டெலி சினிமா பூங்காவை அரசாங்க – தனியார் பங்குடமை திட்டத்தின் கீழ் முகாமிப்பது சம்பந்தமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது 2023‑02‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் இது தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு இந்த பிரேரிப்புகளை அரசாங்க தனியார் பங்குடமை தேசிய முகவராண்மைக்கு தொடர்புபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, இந்த முகவராண்மையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது அமைச்சரவையினால் பரிசீலனைச் செய்யப்பட்டதுடன் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு மஹிந்த ராஜபக்ச தேசிய டெலி சினிமா பூங்காவை அரசாங்க – தனியார் பங்குடமை திட்டத்தின் கீழ் முகாமிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.