• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பிராந்திய மன்றம்
- ஆசிய பிராந்திய மன்றத்தின் உறுப்பு நாடான இலங்கை 2022 – 2024 காலப்பகுதியின் சார்பில் இந்த மன்றத்தின் அணுசக்தி வளர்ச்சி மற்றும் ஆயுத சூனியமாக்கல் பற்றிய சர்வதேச கூட்டத்தொடரில் இணை தலைமைத்துவத்தை வகிக்கின்றது. 2023 மே மாதம் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் ஆசிய பிராந்திய மன்றத்தின் உறுப்பினர்களுக்கான 14 ஆவது ஆசிய பிராந்திய மன்றத்தின் சர்வதேச கூட்டத்தொடரை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறித்த சர்வதேச கூட்டத்தொடருக்கான அனுசரணையை ஏற்பதற்கு தனது அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதன் பொருட்டு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.