• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் 73 ஆவது ஆண்டறிக்கையையானது 2023‑04‑27 ஆம் திகதியன்று நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் ஆண்டறிக்கை கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் குறித்த அறிக்கையை நிதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். இதற்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.