• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி அதிகாரசபை ​தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசியல் உரிமையுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
– 2023 உள்ளூராட்சி அதிகாரசபை ​தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பந்தமாக தேர்தல் நடாத்தப்படும் வரை எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி தேர்தல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புரைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அத்தகைய அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க / பகுதி அரசாங்க நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்களாயின், அவர்களுக்கு மீண்டும் சேவைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தேர்தல் பிரிவிற்கு வௌியே இடமாற்றம் செய்து சேவைக்காக சமூகமளிப்பதற்கான வசதியினை செய்யும் பொருட்டு பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.