• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டமூலம்
- பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டங்களை வரையும் பொருட்டு 2022‑12‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.