• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பின்வரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளை / நியதிகளை / ஒழுங்குவிதிகளை / அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சானதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2022‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2312/67 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள கட்டளை.

* 2006ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க முத்திரைத்தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2022‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2312/73 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள கட்டளை.

* மதுவரி கட்டளைச் சட்டத்திலுள்ள (52 ஆம் அத்தியாயம்) ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2022‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2312/70 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள இலக்கம் 07/2022 கொண்ட மதுவரி அறிவித்தல்.

* 1999 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க புகையிலை வரிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2022‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2312/71 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள புகையிலை வரி அறவீட்டுக் கட்டளை

* 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மது வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2022‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2312/68 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள கட்டளை.

*. 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2022‑12‑09 ஆம் திகதியிடப்பட்டதும் 2309/37 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள கட்டளை மற்றும் 2023‑01‑11 ஆம் திகதியிடப்பட்டதும் 2314/16 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள நியதிகள்.

* 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2023‑01‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 2312/80 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குவிதி.

* 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2022‑12‑31 ஆம் திகதியிடப்பட்டதும் 2312/69 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் மற்றும் 2023‑02‑10 ஆம் திகதியிடப்பட்டதும் 2318/53 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல்.

* 2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட 2023‑01‑26 ஆம் திகதியிடப்பட்டதும் 2316/32 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள கட்டளை.